ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் வீடியோ வைரல்

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (22:38 IST)
ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

அஜித் 61 படத்தின் தலைப்பு (துணிவு) மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்பின் பலனாக சமீபத்தில் படத்தின் தலைப்பு ‘துணிவு’ என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டரும் வெளியானது.

அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டரும் தலைப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், அஜித்குமார் ஹூட்டிங் முடிந்த இரவில் தன் கேரவனைச் சுற்றி இருந்த ரசிகர்களுக்கு கை காட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்தின் துணிவு ரிலீஸ்குக்கு ஒரு நாள் முன்னதாக விஜய்யின் வாரிசு படம் வெளியாகவுள்ளதால் இருவரின் படங்களும் வெற்றியடைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Edited by Sinoj

#AK responds to his fans at #Thunivu Shooting Spot!pic.twitter.com/AR9lQLQfll

— MOVIE HERALD (@movieherald) October 21, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்