நெட்பிளிக்ஸில் முதலிடம் பிடித்த அஜித்தின் 'துணிவு'

வியாழன், 14 டிசம்பர் 2023 (20:35 IST)
2023 ஆம் ஆண்டில் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலில்  அஜித்தின் துணிவு படம் முதலிடம் பிடித்துள்ளது.

நடப்பு ஆண்டில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் ரிலீசாகியுள்ளன. இதில், அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு, லியோ, சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில்,  2023 ஆம் ஆண்டில் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியலில்  அஜித்தின் துணிவு படம் முதலிடம் பிடித்துள்ளது.

அதன்படி,  நடிகர் அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தை 2. கோடி பேர் பார்த்துள்ளனர்.

தனுஷின் வாத்தி  2வது இடத்திலும்,  விஷ்ணுவின் விஷாலின் கட்டா குஸ்தி 3 வது இடத்திலும்,  விஜய் சேதுபதியின் டிஎஸ்பி4 வது இடத்திலும், திரிஷாவின் ராங்கி   5 வது இடத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்