வசூலில் படுமந்தம்… பெரும் பட்ஜெட்டில் உருவான மோகன்லாலில் பரோஸ் படத்தின் நிலை!

vinoth

வியாழன், 2 ஜனவரி 2025 (07:37 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கிய முதல் படமாக ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாகி கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய் அவ்வப்போது படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த படத்தில் மோகன்லால் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவருடன்  Paz Vega என்ற ஹாலிவுட் நடிகை நடித்துள்ளார். இந்த படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் சந்தோஷ் சிவன் படமாக்கியுள்ளார். லிடியன் நாதஸ்வரம் இந்த திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். குழந்தைகளைக் கவரும் படமாக இதை மோகன்லால் உருவாக்கி இருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்த படம் மோசமான வசூலைப் பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய்க்கு மேலான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 5 நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. வசூல் நிலவரம் பற்றி பேசியுள்ள மோகன்லால் “நான் இந்த படத்தை லாபத்துக்காக எடுக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக ரசிகர்கள் என் மேல் காட்டிய அன்புக்கு நான் கொடுத்த பரிசு” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்