பில்லா ஹீரோஸ் மீட்டிங்: ஹைதராபாத் ஹாட் டாக் இதுதான்...

திங்கள், 25 பிப்ரவரி 2019 (17:51 IST)
நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தை முடித்த கையோடு, ஹெச்.வினோத் இயக்கத்தில் பிங்க படத்தின் ரீமேக்கில் நடிக்க கமிட்டானார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். 
 
தல 59 என அழைக்கப்படும் இந்த படத்தில், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 
 
இந்த படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மம்முட்டியின் மாராக்கர்: அரபிக்கடலின்டே சிம்மம் படப்பிடிப்பும், பிராபாஸின் சாஹோ படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. 
 
ஏற்கனவே, மம்முட்டி படப்பிடிப்பிற்கு சென்று விசிட் செய்த அஜித், இப்போது பிரபாஸ் படப்பிடிப்பு சென்று அவரை சந்தித்தாராம். பிரபாஸுடன் பல மனி நேரம் அஜித் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. 
 
ஆனால், இவர்கள் சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. அஜித் தமிழில் பில்லா படத்தில் நடித்தது போல தெலுங்கில் பிராபாஸ் பில்லா படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்