நயன்தாராவுக்காக பஸ்ஸை விலைக்கு வாங்கிய தயாரிப்பாளர்

புதன், 20 மார்ச் 2019 (15:07 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை வித்தியாசமாக புரமோஷன் செய்யும் பணியில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் விளம்பரத்திற்காக ஒரு சூப்பர் டீலக்ஸ் பஸ்ஸை விலைக்கு வாங்கிய தயாரிப்பாளர், அந்த பஸ்ஸின் நாலாபுறங்களிலும் 'ஐரா' படத்தின் நயன்தாரா போஸ்டர்களை வரைந்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பஸ்ஸின் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.சி.டி ஸ்க்ரீனில் இந்த படத்தின் டிரைலர், ஆடியோ ரிலீஸ் விழா ஆகிய வீடியோக்கள் ஓடிக்கொண்டிருக்கும்
 
ஐரா' திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் இந்த பஸ், தமிழகம் முழுவதும் இன்றுமுதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. தயாரிப்பாளரின் இந்த வித்தியாசமான விளம்பர ஸ்டைலை கோலிவுட் திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, அந்த படத்தை விமானத்தில் புரமோஷன் செய்த நிலையில் அதற்கு இணையாக ஐரா படத்தின் புரமோஷனும் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்