இந்த வாரமும் இவனோட அலப்பறை தானா ? போதும்டா சாமி முடியல!

திங்கள், 22 ஜூலை 2019 (11:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. 


 
சாக்ஷி கவினின் காதலை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். " பாட்டு பாடவா பார்த்து பேசவா" என்ற அந்த டாஸ்கில், "நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது" என பாட சாக்ஷி என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து போகிறார். 
 
இந்த பிக்பாஸ் சீசனில் பெரும்பாலான டாஸ்க்குகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறே அமைந்து வருகிறது இதனை கண்ட ரசிகர்கள் இதெல்லாம் பக்கா பிளான் பண்ணி பண்ணுறாங்க என கூறி வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு வாரங்களாக  சாக்ஷி கவினின் காதலை கண்டு வெறுப்பாகியுள்ள ரசிகர்களை தற்போது மீண்டும் வேறுப்பேற்றும் வகையில் மீண்டும் இந்த காதலை ஆரம்பித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். 
 
மேலும் வித்யாசமான டாஸ்க்களை கொடுங்கள் , இதுபோல் மொக்க காதல் கதையை வைத்து எங்கள் உயிரை எடுக்காதீர்கள் என நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்