கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று திரைப்படம் உலகம் முழுவதும் 10000 க்கும் மேற்பட்ட திரைகளில் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. கேஜிஎப் 2 இத்தனை திரைகளில் ரிலீஸாகி இருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தும் இந்த படத்துக்கு 350 திரைகள் வரை மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஏனென்றால் நேற்று விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதிகளவில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது கேஜிஎப் 2 படத்தை வாங்கி தமிழகத்தில் வெளியிடும் எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ள டிவீட்டில் இன்று தமிழகத்தில் 350 திரைகளில் கேஜிஎப் 2 வெளியானது. இன்னும் அதிக திரைகள் ஒதுக்கப்பட உள்ளன. மாபெரும் வரவேற்பைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார். பீஸ்ட் படத்துக்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களால் இப்போது கேஜிஎப் 2 – க்கு அதிக திரைகள் ஒதுக்கப்படுகின்றன.