தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை நடிகையாக அறிமுகப்படுத்தியது இந்தி சினிமாதான். கிக் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், அதன் பின்னர் தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்து ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார்.
அதில் “ஒரு பெண் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது அவரின் விருப்பம். அதில் வெட்கப்படவோ, அதை நியாயப்படுத்தவோ வேண்டிய அவசியம் இல்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன்தான். இது என்னுடைய் வாழ்க்கை, என்னுடைய் முகம். அதற்காக நான் வெட்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.