ஐ ஆம் பேக்… க்யூட்டான போட்டோக்களை வெளியிட்ட சமந்தா!

vinoth

திங்கள், 19 பிப்ரவரி 2024 (11:27 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமந்தா டேக் 20 என்ற புதிய பாட்காஸ்ட் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் தான் சந்தித்த உடல் நலப் பிரச்சனைகள் பற்றியும் உடல்நலத்தை பேணுவதைப் பற்றியும் பேசப்போகிறாராம். இதன் முதல் வீடியோ பிப்ரவரி 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

இப்போது அவர் பேமிலி மேன் இயக்குனர்கள் இயக்கும் சிட்டாடல் என்ற தொடரில் நடித்து வருகிறார். அடுத்து ராம்சரண் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா இயக்கும் புதிய படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் சிவப்பு நிற சேலையில் க்யூட்டாக தோன்றும் புகைப்படத் தொகுப்பை வெளியிட அவை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் நெஞ்சை அள்ளியுள்ளன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்