முன்னதாக காங்கிரஸில் இருந்த குஷ்பூ தற்போது பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வருகிறார். அரசியல் பணிகளுக்கு நடுவேயும் சினிமா, டிவி ஷோக்கள் போன்றவற்றிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் உடல் எடையை வெகுவாக குறைத்த குஷ்பூ தனது ஸ்லிம் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.