வில்லன் கேரக்டர் ஆச்சு கொடுங்க: கதறும் ஹீரோ!!

சனி, 21 அக்டோபர் 2017 (18:17 IST)
நடிகர் ஆதி மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அரவாண், ஈரம் போன்ற படங்களில் நடித்தார்.


 
 
சிறிது காலம் படமில்லாமால் தவித்து வந்தவருக்கு கோச்சடையான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே சமயத்தில் தெலுங்கில் சில படங்களில் வில்லனாக நடித்தார்.
 
அதன் பின்னர் மீண்டும் யாகவராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் நடித்தார். தர்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் தவித்து வருகிறார்.  
 
இதனால், மீண்டும் தெலுங்கிற்கு சென்றுள்ளார். வில்லன் மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். 
 
அதோடு, தமிழிலும் நெகட்டிவ் வேடங்களில் நடிக்க தயாராக உள்ளாராம் ஆதி. சில தமிழ் டைரக்டர்களிடம் தெலுங்கில் வில்லனாக நடித்துள்ள படங்களை முன்வைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்