மோகன்லால் படத்தைப் பார்க்க ஆசைப்படும் ரஜினி

வியாழன், 19 அக்டோபர் 2017 (14:24 IST)
மோகன்லால் நடித்துள்ள ‘வில்லன்’ படத்தைப் பார்க்க ஆசைப்படுகிறாராம் ரஜினி.





மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் ‘வில்லன்’. இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்கள் விஷாலும், ஹன்சிகா மோத்வானியும். மஞ்சு வாரியர், இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த மாதம் 27ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

நல்ல படங்கள் என்று கேள்விப்படும் படங்களைப் பார்த்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். ஆனால், ஒரு படத்துக்காக எதிர்பார்ப்புடன் காத்திருப்பது எதனால்? படத்தைத் தயாரித்துள்ள ராக்லைன் வெங்கடேஷ், ரஜினி நடித்த ‘லிங்கா’ படத்தைத் தயாரித்தவர். அதனால் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறாராம் ரஜினி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்