கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பால் ‘விக்ரம்’ படப்பிடிப்பில் பெரிய மாற்றம்!

திங்கள், 29 நவம்பர் 2021 (17:18 IST)
கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விக்ரம் படப்பிடிப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வந்தது என்பதும் கமல்ஹாசனுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கமல்ஹாசன் குணமாகி வீடு திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், ஆனல் முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் நடத்த திட்டமிட்டிருந்த இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று தற்போது பின்னி மில்லில் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இதனையடுத்து பின்னி மில்லில் பிரமாண்டமான செட் ஒன்று போடப்படுவதாகவும் அங்கு 50க்கும் மேற்பட்ட கார்கள் மோதும் காட்சியை படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்