கன்னடத்தில் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்து உருவான படம் “777 சார்லி”. ஒரு வளர்ப்பு நாயை மையமாக கொண்ட இந்த படம் கடந்த ஜூன் 10ம் தேதி வெளியான நிலையில் விமர்சன அளவிலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
இதையடுத்து இப்போது ரஜினிகாந்த் இந்த படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளதாக ரக்ஷித் ஷெட்டி பதிவு செய்துள்ளார். அதில் “இந்த நாளின் சிறப்பான தொடக்கம். ரஜினி சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவர் நேற்றிரவு சார்லி படத்தைப் பார்த்துள்ளார். படத்தின் தரம் மற்றும் உருவாக்கம் பற்றி பாரட்டிப் பேசினார். க்ளைமேக்ஸ் பற்றி மிகவும் சிலாகித்து பேசினார்” எனப் பதிவு செய்துள்ளார்.