தேசிய விருதுகள் நாளை அறிவிப்பு: சூரரை போற்று, ஜெய்பீம் படங்களுக்கு விருது கிடைக்குமா?
வியாழன், 21 ஜூலை 2022 (19:16 IST)
தேசிய விருதுகள் நாளை அறிவிப்பு: சூரரை போற்று, ஜெய்பீம் படங்களுக்கு விருது கிடைக்குமா?
தேசிய விருதுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் அதில் தமிழ் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களுக்கு நாளை அறிவிக்கப்படும் தேசிய விருதில் விருது கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
48வது தேசிய விருதுகள் அறிவிப்பு நாளை மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது