தமிழ் சினிமாவில் 90 களின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பப்லு, இவர், அஜித்துடன் இணைந்து அவள் வருவாளா, கார்த்தியுடன் பொன்னுமணி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் ஆவார்.
இவர், சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தபோது, சின்னத்திரையில், பல தொடர்களிலும், சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர் மலேசிய பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் கூறியதாவது: திருமணம் செய்து கொண்டதாகப் பலரும் என்னிடம் கேட்கிறார்கள். என் தனிபட்ட வாழ்க்கையை பிரைவேடாக வைக்க முயற்சிக்கிறேன். நான் எதாவது செய்தால் எல்லோருக்கும் தெரியும்படி செய்வேன். உங்கள் ஆசிர்வாதத்துடந்தான் திருமணம் செய்துகொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.