இந்நிலையில் அடுத்து அவர் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்து முன்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில் நான் இந்திரா காந்தியாக நடிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும் எனத் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து இப்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ளன. இந்திரா காந்தி தோற்றத்துக்கு மாற, கங்கனா இப்போது தயாராகி வருகிறார். அதற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனைக் கலைஞருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர அது கவனம் பெற்றுள்ளது.