தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் அடுத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இப்போது அவர் லைகா நிறுவனம் தயாரிப்பில் நடித்த குட்லக் ஜெர்ரி திரைப்படத்தின் ரிலீஸ் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. வரும் ஜூலை 27 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதை அறிவிக்கும் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த படம் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் ஆகும்.