கருப்பட்டி தமிழர்கள் உலகிற்கு அளித்த கொடை. பூக்கள் பூக்க தாவரங்கள் செலுத்தும் திரவத்தில் உள்ள sucrose நமது உடலுக்குத் தேவையான இனிப்பினை வழங்க வாய்ப்பிருப்பதை அறிந்ததுதான் தமிழர்களின் நாகரிக பாய்ச்சலில் முக்கிய புள்ளி. இவ்வகை இனிப்புகளில் முதன்மையாக தமிழர்கள் பயன்படுத்தியது பனை மர இனிப்பூட்டியான பனங் கருப்பட்டியினை.
1) தினசரி நெல்லிக்காய் அளவு கருப்பட்டி உடம்பில் சேர்த்து வந்தால் வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கி சுத்தமாக இருக்கும். இதனை அறிந்தே பிறந்த குழந்தைக்கு கருப்பட்டி தண்ணீர் கொடுத்து வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்குவதை வழக்கமாக்கி இருந்தனர். இன்று வழக்கம் அப்படியே இருக்கிறது ஆனால் நாம் கருப்பட்டி தண்ணீர் என்று பெயர் சொல்லி வெள்ளை சர்க்கரை தண்ணீர் கொடுக்கும் அர்த்தமற்ற வேலையைச் செய்து வருகிறோம்