கொஞ்சம் மாவை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் தட்டையான பந்து மாதிரி தட்டிக் கொள்ளவும். நடுவில் லேசாக அழுத்தி விடவும் பொரிப்பதற்கு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும் ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டு பொரிக்க வேண்டும். அவைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் குறைந்த தீயில் வைத்து பொரித்தெடுக்க வேண்டும்.
ஒரு பக்கம் பொரிந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு பொரிக்க வேண்டும் பொன்னிறமாக மாறும் வரை பொரிக்க வேண்டும். பிறகு ஆற வைக்கவும் அதே நேரத்தில் அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையை சேர்க்க வேண்டும் உடனே தண்ணீர் ஊற்றவும் சர்க்கரை நன்றாக கரையும் வரை 2 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும் பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.