வறுத்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியைக் கலந்து கொள்ளவும். கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம்.
குறிப்பு:
ரவையைச் சிவக்க வறுத்து காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி போன்றவற்றை விரைவில் செய்து முடிக்க வசதியாக இருக்கும், வறுத்து வைப்பதால் பூச்சிகளும் ரவையை அண்டாது.
கேசரி நிறமூட்டி மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும், சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும், அதே போல் ரவையையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும், கருக விட்டால் கேசரி கசக்கும்.