செய்முறை:
பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு நெய்யை விட்டு, அதில் உலர்ந்த திராட்சை, முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, அத்துடன் பீட்ரூட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும். பீட்ரூட் ஈரப்பசையில்லாமல் நன்கு வதங்கியவுடன் பாலைச் சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து பால் சுண்டி பீட்ரூட் கலவையுடன் நன்றாகச் சேர்ந்தப் பின் சர்க்கரையைச் சேர்க்கவும்.
அல்வா நன்கு கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா கெட்டியானவுடன் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய கிண்ணத்தில் போட்டு வைக்கவும். இப்போது பீட்ரூட் அல்வா தயார்.