விஜய்யின் இந்த படத்தில் கண்டிப்பாக நடிப்பேன்..! ஜோதிகா ஓபன்டாக்
வெள்ளி, 16 நவம்பர் 2018 (13:38 IST)
தளபதி விஜய் ஏராளமான காதல் படங்களில் நடித்துள்ளார். அவரது பெரும்பாலான ஹிட் படங்களில் காதலே கதைகளமாக இருக்கும். அவற்றில் மிக முக்கியமான படம் தான் குஷி.
எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார்.
காதலர்களின் ஈகோ மற்றும் கல்லூரி கால காதலை கருவாக கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. இந்நிலையில் காற்றின் மொழி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்த ஜோதிகா செய்தியாளர்களுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார்.
அப்போது, ஜோதிகா கூறுகையில், ஏற்கனவே நான் நடித்திருந்த குஷி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக சொல்கிறார்கள் அவ்வாறு உருவானால் அதிலும் நான் கட்டாயம் நடிப்பேன்.
ஆனால் நான் ஏற்கும் அந்த கதாபாத்திரம் முதிர்ச்சியுடனும், புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்வது போல் இருக்க வேண்டும் என்றார்.