குருநாத் மெய்யப்பனுக்கு தோனி உடந்தையா? பரபரப்பு தகவல்கள்!

செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (17:41 IST)
FILE
ஐபிஎல். கிரிக்கெட் சூதாட்ட அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து ஆங்காங்கே பரபரப்புத் தகவலகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.

அதுபோன்ற ஒரு தகவல்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி, அணி உரிமையாளர் என்று கருதப்படும் குருநாத் மெய்யப்பனின் திட்டங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்பதும்.

6 வீரர்களின் பெயரை நீதிபதி முட்கல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதில் தோனி, ரெய்னா ஆகியோரும் அடக்கம் என்று கூறப்படுகிறது.

மே மாதம் 12ஆம் தேதி 2103-இல் நடந்த ராஜஸ்தான், ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி முன் கூட்டியே திட்டமிடப்பட்டு ஆடப்பட்டதாக அதாவது ஆட்ட நிர்ணய மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து சுதாட்டக்காரர் ஒருவர் போலீசிடம் கூறியதாக் இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது அந்த குறிப்பிட்ட போட்டியில் 140 ரன்களுக்கும் மேல் சென்னை எடுக்கக்கூடாது என்பது ஒப்பந்தமாம், சென்னை சூப்பர் கிங்ஸ் 141 ரன்கள் எடுத்தது.

ஆனால் உரிமையாளர்கள் சூதாட்டம் ஆடியது பெரிதாக விசாரிக்கப்படும் நிலையில் ஆட்டம் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டு சூதாடிகளுக்கு உதவி புரிய ரசிகர்களை ஏமாற்றும் ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் விவகாரங்கள் ஏன் எடுக்கப்படவில்லை என்றால் இந்திய கிரிக்கெட்டின் தூண்களாக கருதப்படும் சிலரை காப்பாற்றுவதற்காகவே என்ற செய்தியும் அடிபட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்