பிரிவது என் முடிவல்ல-மகேஷ் பூபதி

வியாழன், 1 டிசம்பர் 2011 (16:27 IST)
இந்திய டென்னிஸ் ஆடவர் இரட்டையர் ஜோடியான மகேஷ் பூபதி-லியாண்டர் பயஸ் பிரிவ முடிவு செய்து விட்டனர். ஆனால் பிரியும் முடிவை எடுத்தது நான் அல்ல பஸ்தான் என்று மகேஷ் பூபதி தெரிவித்தார்.

இருவௌக்குமே வயதாகிவிட்டதால் இருவருக்குமே இளம் ஜோடி தேவை என்று பயஸ் கருதியதால் பிரிய முடிவு செய்ததாகவும், அவரது முடிவை தான் மதிப்பதாகாவும் பூபதி தெரிவித்தார்.

பூபதி, ரோஹண் போபண்ணாவுடன் ஜோடி சேர, பயஸ், செக். வீரர் ராடெக் ஸ்டெபானெக்குடன் இணைகிறார்.

ஆனால் இருவருக்குமிடையே எந்த வித கசப்புணர்வும் இல்லை என்று பூபதி மீண்டும் தெளிவு படுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்