ஹாக்கி இந்தியா அமைப்புக்கு அளித்திருந்த அங்கீகாரத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் திடீரென திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.
''நாங்கள் தனியார் அமைப்பு. எனவே நிர்வாகிகள் தேர்தலில் வயது வரம்பு உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியதில்லை'' என்று ஹாக்கி இந்தியா அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
அதன் அடிப்படையில் உங்களது அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு ஹாக்கி இந்தியா அமைப்புக்கு தேர்தலுக்கு முன்பாக விளையாட்டு அமைச்சகம் தாக்கீது அனுப்பி இருந்தது.
இந்நிலையில் அரசின் வயது வரம்பை மீறி ஆக்கி இந்தியா தலைவராக 83 வயதான வித்யா ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பப்பட்டார். தேர்தல் நடந்து முடிந்த சில மணி நேரங்களில் அதன் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்திருப்பது, ஹாக்கி இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.