நியூபோர்ட்டில் நடைபெறும் ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் தொடர் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் பிரகாஷ் அமிர்தராஜ் 3ஆம் நிலையில் உள்ள அமெரிக்க வீரர் சாம் குவெர்ரியிடம் தோல்வி தழுவி வெளியேறினார்.
கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறிய பிரகாஷ் அமிர்தராஜ் இந்த முறை 7- 6, 3- 6, 2- 6 என்ற செட் கணக்கில் குவெர்ரியிடம் வீழ்ந்தார். இதனால் குவெர்ரி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
பிரகாஷ் அமிர்தராஜின் தந்தையும், இந்திய டென்னிஸின் முன்னாள் நட்சத்திரமுமான விஜய் அமிர்தராஜ் இதே டென்னிஸ் தொடரில் 1976, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் பிரக்கஷ் அமிர்தராஜ் முதல் செட்டில் டை பிரேக்கில் 9- 7 என்ற சர்வ் கணக்கில் குவெர்ரியை வீழ்த்தினார்.
ஆனால் இரண்டாவது செட்டில் பிரகாஷின் முதல் சர்வை பிரேக் செய்த குவெர்ரி அதன் பிறகு ஒரு பிரேக் பாயிண்ட் வாய்ப்பைக் கூட பிரகாஷிற்கு அனுமதிக்காமல் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.