விம்பிள்டன் துவங்குவதற்கு முன் நடைபெறும் புல்தரை டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை தினாரா சஃபீனா, அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை தானாசுகர்னிடம் 5- 7, 5- 7 என்ற செட் கணக்கில் தோல்வி தழுவி வெளியேறினார்.
இரண்டாவது செட்டில் 4- 2 என்று முன்னிலை பெற்றிருந்தும் சஃபீனா தோல்வி தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அதிர்ச்சித் தோல்வி போட்டியில் இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோன் அதிகம் அறியப்படாத பெல்ஜியம் வீராஙனை யானினா விக்மேயர் என்பவரிடம் 6- 7, 6- 2, 3- 6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி தழுவினார்.
இதனால் இறுதிப் போட்டியில் விக்மேயரும், தானாசுகர்னும் மோதுகின்றனர்.