ஸ்பெயினில் நடைபெறும் மேடிரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் இரட்டையர் காலிறுதிச் சுற்றுக்கு பூபதி- நோல்ஸ் இணை தகுதி பெற்றது. எதிர்த்து விளையாடவிருந்த ஸ்பெயின் இணையான நடால்-மோயா இணை விலகிக் கொண்டதால் இந்திய-பஹாமாஸ் இணை காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலகின் முதலாம் தரவரிசை வீரர் நடால் காயம் காரணமாக விளையாட முடியாததால் விலகிக் கொண்டார்.
முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடாமல் நேரடியாக 2-வது சுற்றை விளையாடவிருந்த பூபதி- நோல்ஸ் இணை தற்போது டென்னிஸ் ஆடமாலேயே காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மற்றொரு இரண்டாவது சுற்று இரட்டையர் ஆட்டத்தில், லியாண்டர் பயஸ்- லூகாச் லூயி இணை 1-6, 6-3, 7-10 என்ற செட்களில் ஸ்பெயினின் பாப்லோ அந்துஜார்-மார்செல் கிரானோலர்ஸ் இணையிடம் போராடி தோல்வி தழுவியது.