மெய்ன்ஸ் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் முன்னிலை!

சனி, 2 ஆகஸ்ட் 2008 (18:46 IST)
ஜெர்மனியின் மெய்ன்ஸ் நகரில் நடந்து வரும் மெய்ன்ஸ் செஸ் கிளாஸிக் தொடரில் ரஷ்யாவின் மொரோசிவிச்சை வென்றதன் மூலம், கிரென்க்லீஸிங் அதிவேக செஸ் போட்டிகளில் இந்தியாவின் ஆனந்த் முதலிடத்திற்கு முன்னேறியுளார்.

இத்தொடரின் 3வது சுற்றில் கருப்புக் காய்களைக் கொண்டு மொரோசிவிச் உடன் மோதிய ஆனந்த், 48வது நகர்த்தலில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு (2 புள்ளி) ஆனந்த் முன்னேறினார்.

மற்றொரு 3வது சுற்றுப்போட்டியில், ஹங்கேரிய வீராங்கனை ஜுடித் போல்கரை வீழ்த்தியதன் மூலம் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனும் 2 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

கிரென்க்லீஸிங் அதி வேக செஸ்ஸில் ஆனந்த், கார்ல்சன் இருவரும் சம புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தாலும், கடந்த கால வெற்றி வாய்ப்புகளை கணித்துப் பார்க்கும் போது ஆனந்த் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்