ஸ்டான்ஃபோர்டில் நடைபெறும் பேங்க் ஆஃப் வெஸ்ட் கிளாசிக் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் அதிகம் அறியப்படாத பிரிட்டிஷ் வீராங்கனையிடம் நேர் செட்களில் தோல்வி தழுவி சானியா மிர்சா வெளியேறினார்.
ஒயில்ட் கார்ட் அனுமதியுடன் இதற்குத் தகுதி பெற்ற பிரிட்டன் வீராங்கனை கியோதவாங் உலகத் தரவரிசையில் 83-வது இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் சானியா 6- 7, 1- 6 என்ற நேர் செட்களில் படு தோல்வி தழுவினார்.
ஒரு மணி நேரம் 20 நிமிடங்களே நடந்த இந்த போட்டியின் முதல் சுற்றில் இருவரும் ஒரு பிரேக் பாயிண்ட் வென்றனர். ஆனால் கடைசியில் சமன் முறிவு ஆட்டத்தில் கியோதவாங் முதல் செட்டை கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் சானியா ஷாட்களும் சர்வ்களும் பொய்த்துப் போயின. 3 முறை தன் சர்வில் தோற்றார்.
இரண்டாவது சுற்றில் பலமான பிரான்ஸ் வீராங்கனை பர்தோலியை, கியோதன்வாங் எதிர்கொள்கிறார்.