2008 பீஜிங் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் ஆடவர் அணிகளுக்கான பிரிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 12 அணிகள் விளையாட உள்ளன. அவை, தலா 6 அணிகள் வீதம் "ஏ', "பி' என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ரவுண்ட் ராபின் லீக் முறையில் போட்டி நடைபெறும்.
"ஏ' பிரிவில் ஜெர்மனி, ஸ்பெயின் கொரியா, நியூஸிலாந்து, பெல்ஜியம், சீனா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. "பி' பிரிவில் ஆஸ்ட்ரேலியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், கிரேட் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
கனடாவில் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் நடைபெறும் கடைசி ஒலிம்பிக் தகுதிப் போட்டிக்குப் பின்னர் மகளிர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.