ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்க வழக்கு!

வியாழன், 10 அக்டோபர் 2013 (14:27 IST)
FILE
ஐபிஎல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட மோசடியை விசாரிக்க புதிய குழு சுதந்திரமான விசாரணையை நடத்தும் வரை ராஜஸ்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கத் தடை விதிக்கவேண்டும் என்று பீகார் கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய...

FILE
கிரிக்கெட் வாரியத்தின் குழு இருவரையும் சுத்தமானவர்கள் என்றும், சூதாட்டத்தில் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தது.

இதை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்யா வர்மா மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஸ்பாட்பிக்சிங் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் நியமித்த குழு சட்டவிரோதமானது என்று மும்பை ஐகோர்ட்டு அதிரடியாக அறிவித்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 3 பேர் கொண்ட புதிய குழுவை சமீபத்தில் நியமித்தது.

ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் குறித்து இந்த புதிய குழு சுதந்திரமான விசாரணையை நடத்தி விசாரணை அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்