தோனிக்கு லாயிட் அறிவுரை

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2011 (13:01 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0- 4 என்ற கணக்கில் தோற்றதற்கு சரியாக தயாராகாததே காரணம் என்று கிளைவ் லாய்ட் தெரிவித்துள்ளார்.

டெஸ்டுக்கு முன்பாக 3 அல்லது 4 பயிற்சி ஆட்டங்களில் ஆடியிருக்க வேண்டும். தனது எண்ணப்படியான அணியை உருவாக்குவதற்கு தோனிக்கு இது சரியான நேரம்.

தனக்கு தேவையான வீரர்களை அவர் தேர்வு குழுவிடம் கேட்டு பெற வேண்டும். இந்திய அணி மறுபடியும் பழைய நிலைக்கு திரும்ப இது மட்டும் தான் சரியான வழி'' என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் கூறியுள்ளார்.

தனக்கும் 1975ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இத்தகைய நெருக்கடி ஏற்பட்டது, அதற்குப் பிறகான ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5- 1 என்று ஆஸ்ட்ரேலியா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. அப்போது தான் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இன்னின்ன மாற்றங்கள் தேவை அப்படியிருந்தால்தான் அணியை வெற்றிப்பாதைகு இட்டுச் செல்ல முடியும் என்று கூறியதாகவும் லாய்ட் தெரிவித்தார்.

அப்போது மேற்கிந்திய தீவுகள் முழுதும் சென்று புதிய திறமைகளைத்தேர்ந்தெடுத்தோம் அதில் பல புதுமுக இளம் வீரர்கள் கிடைத்தனர். அதன் பிறகே அணி வெற்றிப்பாதைக்குத் திரும்பியது.

ஆஸ்ட்ரேலிய வேகத்தை வேகத்தாலேயே முறியடிக்கச் செயல்பட்டோம் வெற்றி கண்டோம். அதேபோல் தோனி இன்று செயல்படவேண்டும். இந்தத் தோல்விகள் ஒரு நல்ல வாய்ப்பு என்றார் கிளைவ் லாய்ட்.

வெப்துனியாவைப் படிக்கவும்