இங்கிலாந்து பயணத்திற்கான இந்திய அணி 2ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது

வியாழன், 23 ஜூன் 2011 (12:22 IST)
இங்கிலாந்து பயணத்திற்கான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் 2ஆம் தேதி சென்னையில் தேர்வு செய்யப்படவுள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 2ஆம் தேதி இந்திய, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளுமாகும்.

ஸ்ரீகாந்த் தலைமையிலான 5 உறுப்பினர்கள் தேர்வு உறுப்பினர்களில் சுரேந்திர பார்வே, நரேந்திர ஹிர்வாணி ஆகியோர் தற்போது மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜூலை 2ஆம் தேதி இந்த இருவர், கேப்டன் தோனி, பயிற்சியாளர் டன்கன் பிளெட்சர் ஆகியோருடன் ஸ்ரீகாந்த் தொலை மாநாட்டில் கலந்து கொள்வார்.

ஜூலை 6- 10 ஆம் தேதிகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து தொடர் முழுதும் தான் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

யுவ்ராஜ் சிங் உடல் தகுதி பெற்றுள்ளார். ஜாகீர் கான், சேவாக், கம்பீர் ஆகியோரும் இங்கிலாந்து பயணத்திற்குள் உடல்தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 21ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 4 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு ஒரு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி பிறகு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் துவங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்