டெண்டுல்கர், ராயுடு அபாரம். மும்பை அணி 159 / 5 விக்.
திங்கள், 2 மே 2011 (18:10 IST)
சச்சின் டெண்டுல்கர், அம்பட்டி ராயுடு ஆகியோரின் அரை சதத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை வான்கிடே மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் பூவா தலையா வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பையை களமிறக்கியது.
14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது மும்பை. ஆனால் அதன் பிறகு இணை சேர்ந்த சச்சினும், ராயுடுவும் மிகச் சிறப்பாக ஆடி அணியின் எண்ணிக்கையை 109 ரன்களுக்கு உயர்த்தினர்.
பிறகு ஆடவந்த போலார்ட் 11 பந்தில் 20 ரன்களும், ரோஹித் சர்மா 11 பந்துகளில் 18 ரன்களும் எடுக்க அணியின் எண்ணிக்கை 150 ரன்களை தாண்டியது. ஆனால் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ரன் குவிக்க விடாமல் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினர்.