ச‌‌ச்‌சி‌ன், ‌விஜ‌ய் அபார‌ம்: இ‌ந்‌தியா 128/2

ஞாயிறு, 10 அக்டோபர் 2010 (17:01 IST)
ஆ‌ஸ்‌ட்ரே‌லியாவு‌க்கு ‌எ‌திரான 2வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌‌யி‌ல் ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டுல்க‌ர், ‌விஜ‌ய் அபாரமாக ‌விளையாடின‌ர். இ‌ந்‌தியா 2வது நா‌ள் ‌ஆ‌ட்ட நேர முடி‌வி‌‌ல் 2 ‌வி‌க்கெ‌ட் இழ‌ப்‌பி‌‌ற்கு 128 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.

முத‌ல் இ‌ன்‌னி‌‌‌ங்‌சி‌ல் ஆ‌‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி 478 ர‌ன்னு‌க்கு ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து தனது முத‌ல் இ‌ன்‌னி‌ங்சை தொட‌ங்‌கிய இ‌ந்‌திய அ‌ணி தொட‌க்க‌ம் ந‌ன்றாக‌த்தா‌ன் இரு‌ந்தது.

சேவா‌‌க் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ப‌ந்து‌வீ‌ச்சை அ‌திரடி ‌விளையாடி வ‌ந்தபோது 30 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌‌ம் இழ‌ந்தா‌ர். அவரை‌த் தொட‌ர்‌‌ந்து ‌திரா‌வி‌ட் ஒரு ர‌ன்‌னி‌ல் வெ‌ளியே‌றினா‌ர்.

பி‌ன்ன‌ர் வ‌ந்த ச‌ச்‌சி‌ன் - ‌விஜயுட‌ன் இணை சே‌ர்‌ந்து அ‌ணியை ச‌ரி‌வி‌ல் இரு‌ந்து ‌மீ‌ட்டா‌ர். 27 ர‌ன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்தபோது 14 ஆ‌யிர‌ம் ர‌ன்களை கட‌ந்த ‌ச‌‌ச்‌சி‌ன் த‌ற்போது 44 ர‌ன்‌னி‌‌ல் ‌விளையாடி வரு‌கிறா‌ர். ‌விஜ‌ய் 42 ர‌ன்‌னி‌ல் உ‌ள்ளா‌ர்.

2வது நா‌ள் ‌ஆ‌ட்ட நேர முடி‌வி‌‌ல் இ‌ந்‌தியா 2 ‌வி‌க்கெ‌ட் இழ‌ப்‌பி‌‌ற்கு 128 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. த‌ற்போது ஆ‌ஸ்‌ட்ரே‌லியாவை‌விட 350 ர‌ன்க‌ள் ‌‌பி‌ன் த‌ங்‌கியு‌ள்ளது.

4 ப‌ந்துக‌ள் ‌மீ‌தி இரு‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல் போ‌திய வெ‌‌ளி‌ச்ச‌ம் இ‌ல்லாததா‌ல் ஆ‌ட்ட‌த்தை முடி‌த்து‌க் கொ‌ள்வதாக நடுவ‌ர்க‌ள் அ‌றி‌வி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்