சூதாட்டம் குறித்து வீரர்கள் பேசினார்கள்-கில்கிறிஸ்ட்
சனி, 5 ஜூன் 2010 (15:08 IST)
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் போது ஆட்ட நிர்ணய சூதாட்ட அச்சுறுத்தல் குறித்து வீரர்கள் பலர் தங்களிடையே பேசிக்கொண்டனர் என்று டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தலைவர் ஆடம் கில்கிறிஸ்ட் ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"அதனை வீரர்கள் விவாதித்தனர், சூதாட்டன் நடைபெறவில்லை என்று நாம் வெகுளித்தனமாக நம்பக்கூடாது என்ற அளவில் வீரர்கள் அதனை தங்களிடையே விவாதித்துக் கொண்டனர். ஏனெனில் இதில் சுலபமாக அணுக முடியும்.
சூதாட்டம் நிகழ்ந்திருந்தால் நான் கவலையடைந்திருப்பேன், ஆனால் நிகழ்ந்ததற்கான எந்த விதமான தூல நிரூபணங்களும் இல்லை." என்றார் கில்கிறிஸ்ட்.
"நமக்குத் தேவை தெளிவான நிரூபணம், அது இன்னமும் குறிப்புகளாகவும், கிசுகிருப்பாகவுமே உள்ளது. போலீஸ் ஒரு வீரரை சமீபத்தில் கைது செய்துள்ளது. சரியான சாட்சியங்கள் தேவை அது இல்லாமல் இது போன்ற நடவடிக்கைகள் ஒன்றும் இல்லாமல் போய்விடும்." என்றார் கில்கிறிஸ்ட்.