மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 3 சதங்களை அடுத்தடுத்து அடித்து 3ஆம் நிலையில் தன்னுடைய இடத்தை பிடித்துக் கொண்டுள்ள இங்கிலாந்து வீரர் ரவி பொபாரா உண்மையில் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த வீரர்தானா என்று ஆஸ்ட்ரேலிய சுழற்பந்து மேதை ஷேன் வார்ன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு ஆஸ்ட்ரேலிய தொடர்க்கு முன்னும் அந்த அணியின் பேட்ச்மென்கள், பந்து வீச்சாளர்கள் குறித்து எக்குத்தப்பாக ஏதாவது கூறி அவர்களை வெறுப்பேற்றும் வழக்கம் ஆஸ்ட்ரேலிய அணி வீரரகளிடம் உண்டு. அதன் தொடர்ச்சியாக ஷேன் வார்ன் இவ்வாறு கூறுகிறார் என்று பலர் கருதுகின்றனர்.
"பொபாரா ஒரு சிறந்த உள்- நாட்டு கிரிக்கெட் பேட்ஸ்மென், அவர் சர்வதேச கிரிக்கெட் வீரர் அல்ல, அவரிடம் உலகில் உள்ள அனைத்துத் திற்மைகளும் இருக்கலாம் ஆனால் பொறுமை இல்லை. இங்கிலாந்து இவரை நம்பி திட்டமிட்டால் அதோகதிதான், அந்த அணி கெவின் பீட்டர்சன், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஆகியோரைச் சுற்றியே திட்டமிடுவது நல்லது" என்று கூறியுள்ளார் ஷேன் வார்ன்.