தோள்பட்டை காயம் காரணமாக ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை போட்டிகளிலிருந்து விலகிய சேவாக், அறுவை சிகிச்சைக்கு பிறௌ 12 முதல் 16 வாரங்கள் வரை ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராஃபியில் விளையாடுவதும் சந்தேகமாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் உடற்கூறியல் நிபுணர் நிதின் படேல் சேவாக் காயத்திலிருந்து விரைவில் குணமாகும் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளார். இவர் அவ்வப்போது சேவாகின் உடற்தகுதி குறித்து செய்திகளை வெளியிடவுள்ளார்.
முதலில் பந்தை இவரால் த்ரோ செய்ய முடியுமா என்பது பரிசோதனை செய்யப்படும். ஆனால் இதற்கே 10 வாரங்கள் வரை ஆகும் என்று தெரிகிறது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24ஆம் தேதி துவங்குகிறது.
கட்ம் நெருக்கடியான கால இடைவெளியில் அதிக போட்டிகளை நடத்திஅ ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது சேவாக் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.