எப்போதும் எனக்கு மட்டும் ஏன் இது நிகழவேண்டும்-கங்கூலி

சனி, 18 ஏப்ரல் 2009 (15:00 IST)
இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட சௌரவ் கங்கூலி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து கூறிய கங்கூலி, எப்போதும் எனக்கு மட்டும் இது போன்று ஏன் நிகழ்கிறது என்று தெரியவில்லை என்று வருந்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கங்கூலி தொலைக்காட்சி சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "எனக்கு மட்டும் ஏன் இது எப்போதும் நிகழ்கிறது என்று தெரியவில்லை, ஆனால் ஒரு விளையாட்டு வீரனாக சர்ச்சைகளை விளையாட்டின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன்.

என்னை பொறுத்தவரை கடவுள் எனக்கு வாழ்க்கையில் நிறைய அளித்திருக்கிறார், இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளேன், தேசிய அணிக்கு நீண்ட நாட்கள் விளையாடியுள்ளேன், கடவுள் என்னிடம் அன்பாகவே இருந்து வந்துள்ளார்." கேப்டன் பொறுப்பிலிருந்து தான் நீக்கப்பட்டது அணியின் முடிவு அதனுடன் நான் ஒத்துப் போகிறேன் என்று கூறினார் கங்கூலி.

ஆனால் மெக்கல்லம் தலைமையின் கீழ் விளையாடுவது தனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் அணியின் வெற்றிக்கு என் பங்கு என்னவாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றி நான் யோசித்து வருகிறேன்.

மெக்கல்லத்திற்கு எனது வாழ்த்துக்கள். அணி வெற்றி பெற பாடுபடுவேன். என்று அந்த பேட்டியில் கங்கூலி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்