ஸ்ட்ராஸ் 96, இங்கிலாந்து 218/2

Webdunia

வியாழன், 19 ஜூலை 2007 (21:12 IST)
இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 96 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, மைக்கேல் வானுடன் இணைந்து 2வது விக்கெட்டிற்கு 142 ரன்கள் குவித்து அணியின் எண்ணிக்கையை 218 ரன்களுக்கு உயர்த்தியுள்ளார்!

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்களை எடுத்துள்ளது.

அபாரமாக ஆடிய ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 186 பந்துகளில் 14 பெளண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனில் கும்ளேயின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

மைக்கேல் வான் 166 பந்துகளில் 10 பெளண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றார்.

மறுமுனையில் கெவின் பீட்டர்சன் ஆடவந்துள்ளார்.

------
இங்கிலாந்து 169/1 (48 ஓவர்கள்)

இங்கிலாந்து அணி துவக்க ஆட்டக்காரர் அலாஸ்டர் குக் விக்கெட்டை மட்டுமே இழந்து 169 ரன்களை எடுத்துள்ளது!

பூவா - தலையா வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அலாஸ்டர் குக், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நல்ல துவக்கத்தைத் தந்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 14.4 ஓவர்களிலேயே 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலாஸ்டர் குக் ஆட்டமிழந்தார்.

அலாஸ்டர் குக் விக்கெட்டை செளரவ் கங்கூலி வீழ்த்தினார். கங்கூலியின் பந்தை தடுத்தாட முயன்று எல்.பி.டபிள்யூ. ஆகி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் குக். அடுத்து ஆடவந்த வானுடன் இணை சேர்ந்து அணியின் எண்ணிக்கை 48வது ஓவரின் முடிவில் 169 ரன்களுக்கு உயர்த்தினார் ஸ்ட்ராஸ்.

ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 141 பந்துகளை எதிர்கொண்டு 11 பெளண்டரிகளுடன் 67 ரன்களும், அணித் தலைவர் மைக்கேல் வான் 114 பந்துகளில் 8 பெளண்டரிகளுடன் 48 ரன்களும் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்