நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி தொடங்குவது எப்போது? ஐபிஎல் சேர்மன் தகவல்!

வியாழன், 6 மே 2021 (07:35 IST)
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி எப்போது தொடங்குவது என்பது குறித்து தகவலை ஐபிஎல் சேர்மன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
ஐபிஎல் பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஐபிஎல் தொடரில் இன்னும் 31 போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில் இந்த போட்டிகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் அனேகமாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவோ அல்லது பிறகு நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அட்டவணையை பார்த்து அதற்குரிய வகையில் எஞ்சிய போட்டிகளின் அட்டவணையை உறுதி செய்யப்படும் என்றும் ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாவிட்டால் கடந்த ஆண்டை போலவே ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நடத்தவுடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்