தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறாரா கோலி?

செவ்வாய், 14 டிசம்பர் 2021 (11:17 IST)
தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள ஒருநாள் தொடரில் இருந்து கோலி விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய லிமிடெட் ஓவர் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியில் இருந்து அவர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது டெஸ்ட் தொடருக்கு பின்னர் தொடங்கும் ஒருநாள் தொடரில் இருந்து கோலி விலக முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனது குழந்தை வாமிகாவின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவர் இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்