முடி வெட்டி, ரத்தம் வெளியேற்றியும் எடை குறையவில்லை.. வினேஷ் போகத்துக்கு என்ன நடந்தது?

Mahendran

புதன், 7 ஆகஸ்ட் 2024 (14:58 IST)
ஒலிம்பிக் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் , உடல் எடையை றைப்பதற்கு தலை முடி வெட்டப்பட்டதாகவும், உடலில் இருந்து ரத்தம் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் வினேஷ் போகத் எடையை 50 கிலோவாக குறைக்க முடியாமல் போயுள்ளதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும் வினேஷ் போகத் பொதுவாக 53 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்பவர் என்றும், ஆனால் இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் அரையிறுதி போட்டி முடிந்த பிறகு வினேஷ் போகத் 1 கிலோ வரை அதிகமாக இருந்ததாக தெரிகிறது.
 
எடையைக் குறைக்க உறங்காமல் இரவு முழுவதும் வினேஷ் போஹத்  ஸ்கிப்பிங் உள்ளிட்ட வொர்க் அவுட் மேற்கொண்டு உள்ளார்.. உணவையும் தவிர்த்துள்ளார், ஆனால் எடை பரிசோதனையில் வினேஷ் போஹத் 100 கிராம் அளவு அதிக எடை இருந்து இருக்கிறார்.
 
இந்திய ஒலிம்பிக் கமிட்டி வினேஷ் உடல் எடையைக் குறைக்க அவகாசம் கேட்டதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்