100 கிராம் வித்தியாசத்தால் 20 ஆண்டு கால உழைப்பு வீண்: வினேஷ் போகத் சகோதரி ஆதங்கம்..!

Siva

புதன், 7 ஆகஸ்ட் 2024 (18:04 IST)
100 கிராம் வித்தியாசம் காரணமாக எனது சகோதரியின் 20 ஆண்டுகால உழைப்பு வீணாகிவிட்டது என்று வினேஷ் போகத்தின் சகோதரி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் அவருடைய சகோதரி சங்கீத் போகத் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார். 
 
 இது வினேஷுக்கு மட்டுமல்ல, பெண்கள் அனைவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பு என்றும் இந்த செய்தியை யாரும் நம்ப விரும்ப மாட்டார்கள் என்றும் எனக்கு என்ன கூறுகிறது என்றே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
20 ஆண்டுகால கடினமான உழைப்பு கடைசியாக 100 கிராமில் வீணாகிவிட்டது என்றும் இதிலிருந்து நானும் என் சகோதரியும் எனது குடும்பமும் எப்படி மீள்வது என்றே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார் 
 
இந்த பதக்கம் எங்கள் அனைவருக்கும் சொந்தமானது, இது காலத்தின் கொடுமையா என்று தெரியவில்லை, இந்த கொடுமைக்கு மத்தியில் ஒரு உண்மையான மற்றும் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார்
 
உடல் எடையை குறைப்பதற்காக வினேய் போகத் தலை முடியை வெட்டியும் உடல் ஆடையை குறைத்தும் ரத்தத்தை வெளியேற்றியும் கூட 50 கிலோவுக்குள் கொண்டு வர முடியவில்லை என்பது துரதிஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்