அந்தவகையில் அந்த நாட்டில் இருக்கும் முக்கியமான கிரிக்கெட் மைதானங்கள் இப்போது தாலிபான்கள் வசம் சென்றுள்ளது. இதில் காந்தஹார் சர்வதேச கிரிக்கெட் மைதானம், குண்டுஸ் கிரிக்கெட் மைதானம், கோஸ்ட் சிட்டி கிரிக்கெட் மைதானம் ஆகியவை அடக்கம். இதையடுத்து பல்க் கிரிக்கெட் மைதானத்தை கைப்பற்றுவதற்கான சண்டை இப்போது நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில் இது ஆப்கான் கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.