ஊழல் அதிகாரி இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவராக நியமனம்!

புதன், 28 டிசம்பர் 2016 (13:00 IST)
இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவராக முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கல்மாடி மற்றும் அபே சிங் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


 
 
கடந்த 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது ரூ.90 கோடிக்கு அரங்கம் அமைத்தது, விளையாட்டுச் சாதனங்கள் வாங்கியது உட்பட பல ஏற்பாடுகளில் ஊழல் நடைபெற்றது தொடர்பாக சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. 
 
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடி சுமார் 10 மாத காலம் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் இவர் இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்