சுப்மன் கில் இரட்டை சதம்: இலங்கைக்கு 350 ரன்கள் இலக்கு கொடுத்த இந்தியா!

புதன், 18 ஜனவரி 2023 (17:25 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஐதராபாத் தானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்துள்ளது 
 
சுப்மன் கில் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் அடைந்துள்ளார். அவர் 149 பந்துகளில் 19 பவுண்ட்ரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 208 ரன்கள் எடுத்து அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் பட்டியல் இரட்டைச் சதம் அடித்த சுப்மன் கில்லுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இந்த நிலையில் 350 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்