இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டி: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி

செவ்வாய், 4 அக்டோபர் 2022 (22:46 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
 
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது 
 
இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணியின் ரிலே ரோஷோ மிக அபாரமாக விளையாடி 48 பந்துகளில் 100 ரன்கள் அடித்து உள்ளார். 
 
இந்த நிலையில் 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்